Wednesday, March 17, 2010

பகிர்வாளன் திட்டம் - ஒர் அறிமுகம்

பகிர்வாளன் திட்டம் - ஒர் அறிமுகம்

விவசாயிகளும்
அத்துறை சார்ந்தவர்களும் இடைத்தரகர்கள் இன்றி நேரடிவணிகம் செய்திட ஒரு வாய்பு . பகிர்வாளனைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. இதைப்பயன்படுத்த மக்களிடம் இருக்க வேண்டியதெல்லாம் ஒரு அலைப்பேசி (Mobile Phone) மட்டுமே.

பகிர்வாளன் செயல்முறை:

மக்கள் தாங்கள் விற்க வாங்க விரும்பும் பொருள்கள் பற்றிய தகவல்களைக் குறுஞ்செய்திகள்மூலம் பகிர்வாளனுக்கு தெரியப்படுத்த வேண்டும். பகிர்வாளனின் தொடர்பு எண்:
(SMS) 9486156444. மக்கள தாங்கள் அனுப்பிய விற்க வாங்க தகவல்களுக்குப் பொருந்தும்தகவல்கள் பகிர்வாளனிடம் சேமிக்கப்பட்டிருந்தால், அவை உடனே குறுஞ்செய்திகள் மூலம்தெரியப்படுத்தப்படும். அவ்வாறு விடையாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகளில் பொருந்தும்விருப்பமுடைய நபர்களின் தொடர்பு எண்கள் இருக்கும்.

குறுஞ்செய்தி அனுப்பும் முறை:

விற்க விரும்பி அனுப்பும் தகவல்:
<ஊர் பெயர்>1 <பொருள் பெயர்> <எண்ணிக்கை / எடை> <பொருள் ஒன்றின் விலை>

மாதிரி செய்தி:
melur1 thengai 500 4
விளக்கம்: மேலூரிலிருந்து 500 தேங்காய்களை, ஒன்றின் விலை ருபாய் 4கிற்கு விற்க விரும்பிஅனுப்பப்பட்ட தகவல்.

வாங்க விரும்பி அனுப்பும் தகவல்:

<ஊர் பெயர்>2 <பொருள் பெயர்> <எண்ணிக்கை / எடை> <பொருள் ஒன்றின் விலை>

மாதிரி செய்தி 1:
melur2 milk 500 ௧௮
விளக்கம்: மேலூரிலிருந்து 500 லிட்டர் பால், லிட்டர் ஒன்றின் விலை ருபாய் 18 கிற்கு வாங்கவிரும்பி அனுப்பப்பட்ட தகவல்.

விற்க வாங்க விரும்பி அனுப்பும் தகவல்களின் நியமங்களில் உள்ள ஒரே வேறுபாடு ஊர்பெயரை ஒட்டி "1" குறிப்பிடுவதா அல்லது "2" குறிப்பிடுவதா என்பது மட்டுமே. விற்பதற்குயும் வாங்குவதற்கு "2"யும் குறிப்பிட வேண்டும்.

"1"ஊர் பெயரும் பொருள் பெயரும்:
ஒரு ஊர் பெயரையோ பொருள் பெயைரையோ பல வகைகளில் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டு: தேங்காய் என்பதை “thengai”
என்றும் “coconut” என்றும் குறிப்பிடவாம். இதுப்போன்ற மாற்றங்களை சமாளிக்கும் வகையிலேயே பகிர்வாளன்வடிவமைக்கப்பட்டுள்ளது. விற்க வாங்க விரும்பும் பொருள் என்பது விவசாயமும் அத்துறைசார்ந்த எந்த உற்பத்தியாகவோ பொருளாகவோ இருக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு:

பகிர்வாளனை பயன்படுத்துவதில் சந்தேகங்கள் இருந்தால்
9095432905 என்ற எண்ணுக்குதொடர்பு கொள்ளவும்.

English Version of This Website is also Available